அஞ்சலை பொன்னுசாமி, பாடகர் கிருஷ்ணகுமார் மறைவுக்கு முதல்வர் இரங்கல்

சென்னை:  இந்திய விடுதலை போராளி அஞ்சலை பொன்னுசாமி, பாடகர் கிருஷ்ணகுமாரின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட இரங்கல் செய்தி: 1943ம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின்போது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் ‘இந்திய தேசிய ராணுவத்தில்’ ஜான்சி ராணி படைப்பிரிவில் இணைந்து இந்தியாவின் விடுதலைக்காக போராடிய வீரமங்கையான அஞ்சலை பொன்னுசாமி அம்மாள் (102) நேற்று முன்தினம் மலேசியாவின் செந்துல் நகரில் காலமாகியுள்ளார். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் மறைவிற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related Stories: