கே.கே.நகர் சக்தி விநாயகர் கோயில் திருமண மண்டபத்தில் குளிர்சாதன வசதி மற்றும் திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.!

சென்னை: சென்னை கே.கே. நகர் அருள்மிகு சக்தி விநாயகர் திருக்கோயில் திருமண மண்டபத்தில், குளிர்சாதன வசதி மற்றும் திருப்பணிகளை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தொடங்கி வைத்தார். அதன் பின்பு அவர் பேசும் போது; மாண்புமிகு தமிழ்நாடு முதலைமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டிதலின் படி இக்கோயில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 2005 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது.

அதன் பின்பு 2017  ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய குடமுழுக்கு விழா இன்னும் நடைபெற வில்லை இந்த அரசு பதவியேற்ற பிறகு பெரிய மற்றம் சிறிய திருக்கோயில்கள் என்று பாராமல் அனைத்து திருக்கோயில்களையும் ஒரே நிலையில் பார்த்து வாரந்தோரும் 150 மேற்ப்பட்ட திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இத்திருக்கோயிலில் ரூ 28 லட்சம் மதிப்பீட்டில் திருமண மண்டபத்தில் குளிர்சாதன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதே போல் ஆணையர் பொது நல நிதியிலிருந்து  ரூ58,39 லட்சம் (ம) உபயதாரர் நிதியிலிருந்து ரூ3,65 லட்சம் மதிப்பீட்டில் திருக்கோயில் இராஜகோபுரம், மகா மண்டபம், நவகிரகம், ஆஞ்சநேயர் சன்னதி, உற்சவ மண்டபங்கள் போன்ற கட்டிடப்பணிகள் தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது, இந்த பணிகள் இந்த ஆண்டிற்குள் முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படும். தமிழ்நாட்டில் கடந்த 10 மாதங்களில்  507 மேற்ப்பட்ட திருக்கோயில்களில் திருப்பணிகள் எடுத்துகொள்ளப்பட்டு ரூ 664கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. 100 மேற்ப்பட்ட பணிகளுக்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது, 1000 ஆண்டுகள் பழைமையான 197 திருக்கோயில்கள் தொன்மை மாறாமல்  திருப்பணி தொடங்கப்படும், அதே போல் 100 ஆண்டுகள் பழைமையான திருக்கோயில்கள் கணக்கெடுக்கும் பணிகள் நடந்து வருகிறது.

 இப்பணிகள் முடிந்தவுடன் திருப்பணிகள் தொடங்கும் பலமாற்று பொன் இனங்களில் திருக்கோயிலுக்குத் தேவைப்படும் இனங்கள் நீங்கலாக ஏனைய இனங்களை மும்பையிலுள்ள ஒன்றிய அரசுக்குச் சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி சொக்கத்தங்கமாக மாற்றி திருக்கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கிகளில் முதலீடு செய்து அதிலிருந்து பெறப்படும் வட்டி மூலமாக திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலுக்கு பக்தர்களால் உண்டியலில் மற்றும் காணிக்கையாக செலுத்தப்பட்ட பொன் இனங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு திருக்கோயிலின் உபயோகத்திற்கு தேவைப்படாமல் தொகுப்பாக வைக்கப்பட்டிருந்த பலமாற்றுப் பொன் இனங்கள் மாண்பமை ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் செல்வி.ஆர்.மாலா அவர்கள் முன்னிலையில் 27,236.600 கிராம் எடையுள்ள பலமாற்றுப் பொன் இனங்கள் பிரித்தெடுக்கப்பட்டு திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் பாரத ஸ்டேட் வங்கி, சாத்தூர் கிளை முதன்மை மேளாலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

 தற்போது மும்பையில் உள்ள தங்க உருக்காலையில் தங்க பிஸ்கட்டுகளாக மாற்றும் திட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் ஆண்டிற்கு 24லட்சம் வட்டி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது இதை வைத்து இத்திருக்கோயிலில் வருகின்ற பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும், அதே போல் பரம்பரை அறங்காவல்கள் உள்ள பண்ணாரி அம்மன் திருக்கோயில், பெரிய பாளையத்து அம்மன் திருக்கோயில்களில் இப்பணிகள் விரைவில் தொடங்கும், மற்ற திருக்கோயில்களில் அறங்காவலர்கள் நியமனத்திற்கு பின்பு இப்பணிகள் தொடங்கும்.

மயிலாப்பூர் அருள்மிகு காபாலீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான மயில் கடந்த காலங்களில் காணாமல் போனது கண்டுபிடிக்க தற்போது நீதி அரசர் வெங்கட் ராமன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரனை நடைபெற்று வருகிறது. இது சட்டத்தின் ஆட்சி சட்டத்திற்குட்பட்டு அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எ.எம்.வி.பிரபாகர் ராஜா, நிலைக்குழு தலைவர் திரு.க.தனசேகரன், 131 வது வட்ட மாமன்ற உறுப்பினர் நிலவரசி துரைராஜ், தொழிலதிபர் திரு.கௌதம், சென்னை திருக்கோயில் இணை ஆணையர் திருமதி.கி.ரேனுகாதேவி, செயல் அலுவலர் திருமதி. ப.லதா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: