பொன்னேரி நகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் : அமைச்சர் ஆவடி சாமு நாசர் பங்கேற்பு

பொன்னேரி: பொன்னேரி நகராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சாமு நாசர் அறிவுரை வழங்கினார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 27 பேர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் டி.ஜெ. கோவிந்தராஜன் தலைமையில் பொன்னேரியில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சாமு நாசர் கலந்துகொண்டு தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார்.  பின்னர், வார்டு கவுன்சிலர்கள் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சால்வை அணிவித்து அவர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

அப்போது அமைச்சர் சா.மு. நாசர்  பேசியதாவது,  கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் அதிமுக செய்த ஊழல்களை பொது மக்களுக்கு எடுத்துக்கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும்.  பொன்னேரி நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என  தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் க.சுந்தரம், முன்னாள் மாவட்ட கழக செயலாளர்கள் கும்மிடிப்பூண்டி வேணு, இ.ஏ.பி. சிவாஜி, உள்ளிட்ட மாவட்ட.ஒன்றிய நகர, திமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Stories: