ஏழுமலையான் தரிசனம் பிப்ரவரி டிக்கெட் நாளை வெளியீடு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிப்ரவரி மாதம் தரிசனம் செய்வதற்கான சிறப்பு தரிசனம் டிக்கெட்டுகள் நாளையும், இலவச தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் நாளை மறுநாளும் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

இதுதொடர்பாக, திருப்பதி- திருமலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிப்ரவரி மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்ெகட்டுகள்  ஒரு நாளைக்கு 20 ஆயிரம் வீதம் என  28-ந் தேதி (நாளை) காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. இலவச தரிசனத்துக்காக தினந்தோறும் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் 29ம் தேதி காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. எனவே பக்தர்கள் பிப்ரவரி மாதத்துக்கான டிக்கெட்டுகளை https://tirupatibalaji.ap.gov.in/#/login என்ற தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

Related Stories: