இனி ஆட்டமில்லை... ஹர்பஜன் முடிவு?

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர்  ஹர்பஜன்சிங் (41), ஐபிஎல் தொடர்களில்   மும்பை இந்தியன்ஸ்,  சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடி வந்தார். கடந்த ஆண்டு நடந்த தொடரில் இருந்து கொரோனா காரணமாக விலகினார். 2021 சீசனில் கேகேஆர் அணியுடன் இணைந்தார். ஆனால் ஆடும் வாய்ப்பு அதிகம் கிடைக்கவில்லை. இந்நிலையில், அடுத்த ஐபிஎல் சீசனில்  ஏதாவது ஒரு அணிக்காக பயிற்சியாளர் அல்லது ஆலோசகராகப்  பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு வசதியாக அடுத்த வாரம் ஹர்பஜன் தனது ஓய்வு முடிவை அறிவிக்கலாம் என்று கூறப்படுகிறது.

Related Stories:

More