சில்லி பாயின்ட்…

* சிட்னியில் நடந்து வரும் ஆஸ்திரேலியா ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆகர்ஷி காஷ்யப், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் எச்.எஸ்.பிரணாய், சமீர் வர்மா, கலப்பு இரட்டையர் பிரிவில் சுமித் ரெட்டி/சிக்கி ரெட்டி என இந்திய வீரர், வீராங்கனைகள் காலிறுதியில் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினர்.
* இந்தியா – தென் ஆப்ரிக்கா மகளிர் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி பெங்களூருவில் நாளை நடைபெற உள்ளது. எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கும் இப்போட்டி பிற்பகல் 1.30க்கு தொடங்கும்.
* ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் லீக் டி20 தொடரில் களமிறங்கும் மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸி. அணி முன்னாள் கேப்டன் கேமரான் ஒயிட் 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தமாகி உள்ளார்.
* நடப்பு உலக கோப்பை டி20 தொடரில் இந்தியா விளையாடிய 3 லீக் ஆட்டங்களிலும் தொடக்க வீரர் விராத் கோஹ்லி சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து (1, 4, 0) ஏமாற்றம் அளித்த நிலையில், அடுத்து வரும் போட்டிகளில் அவர் பெரிய ஸ்கோர் அடிப்பார் என இந்திய அணி முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
* பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் ஆண்கள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியா சார்பில் ரோகன் போபண்ணா – ஸ்ரீராம் பாலாஜி (தமிழ்நாடு) இணைந்து களமிறங்குவார்கள் என இந்திய டென்னிஸ் சங்கம் அறிவித்துள்ளது. சுமித் நாகல் மாற்று வீரர் பட்டியலில் உள்ளார்.
* மழையால் ஆட்டம் பாதிப்பு
டி20 உலக கோப்பை ஏ பிரிவில் அமெரிக்கா – அயர்லாந்து அணிகளிடையே இந்திய நேரப்படி நேற்று இரவு 8.00 மணிக்கு தொடங்க இருந்த லீக் ஆட்டம், கனமழை காரணமாக பாதிக்கப்ட்டது. மைதானம் ஈரமாக இருந்ததால் டாஸ் போடுவது தாமதமான நிலையில், ஆடுகளத்தை தார்பாய் கொண்டு மூடியுள்ளனர். இந்த போட்டி ரத்தாகி இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டால், அமெரிக்கா 5 புள்ளிகளுடன் 2வது இடம் பிடிப்பதுடன் சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறும். பாகிஸ்தான், கனடா, அயர்லாந்து அணிகள் வெளியேற்றப்படும்.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Related Stories: