7000 ரன்களை கடந்து ஸ்மிரிதி சாதனை

பெங்களூர்: இந்தியா-தென் ஆப்ரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் ஆட்டம் நேற்று பெங்களூரில் நடந்தது. அதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50ஓவர் முடிவில் 8விக்கெட் இழப்புக்கு 265ரன் எடுத்தது. அதில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிரிதி மந்தனா தனது 6வது ஒருநாள் சதத்தை விளாசியதுடன் 117 ரன் குவித்தார்.

அத்துடன் அவர் 27.1வது ஓவரில் 59வது ரன் எடுத்த போது சர்வதேச போட்டிகளில் 7000 ரன்னை கடந்து சாதனை படைத்த இந்திய வீராங்கனைகளின் பட்டியலில் இணைந்தார். அவர் நேற்று வரை 6டெஸ்ட்களில் 480, 83 ஒருநாளில் 3359, 133 டி20களில் 3220ரன் என மொத்தம் 7059ரன் சேர்த்துள்ளார். ஒருநாள் ஆட்டங்களில் அதிக ரன் குவித்த இந்திய வீராங்கனைகள் பட்டியலில் 3வது இடத்தை ஸ்மிரிதி பிடித்துள்ளார். முதல் 2 இடங்களில் மிதாலி ராஜ் (7805ரன்), ஹர்மன்பிரீத் (3420ரன்) ஆகியோர் உள்ளனர்.

 

The post 7000 ரன்களை கடந்து ஸ்மிரிதி சாதனை appeared first on Dinakaran.

Related Stories: