உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் லீக்போட்டி: நமீபியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து

டிரினிடாட்: உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் லீக்போட்டியில் இங்கிலாந்து அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் நமீபியா அணியை வென்றது. டிரினிடாட்டில் நடந்த குரூப் சி போட்டியில் டாஸ் வென்ற நமீபியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. மழை குறுக்கிட்டதால் 10 ஓவர்களாக குறைக்கப்பட்ட போட்டியில் இங்கிலாந்து அணி 122/5 ரன்கள் எடுத்தது. நமீபியா 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் மட்டுமே எடுத்து 41 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. நமீபியாவை வென்றதன் மூலம் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இங்கிலாந்து அணி பிரகாசமாக்கி உள்ளது. இன்றைய போட்டியில் ஸ்காட்லாந்து அணியை ஆஸ்திரேலிய அணி வீழ்த்தினால் இங்கிலாந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

The post உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் லீக்போட்டி: நமீபியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து appeared first on Dinakaran.

Related Stories: