டி20 உலகக்கோப்பை: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 104 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி

செயின்ட் லூசியா: டி20 உலகக் கோப்பையில் இன்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டிக்கான டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் துவக்க ஆட்டக்காரர் பிரண்டன் கிங் 7 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்த விக்கெட்டிற்கு ஜான்சன் சார்லஸ் – நிக்கோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தனர்.

இந்த ஜோடி ஓமர்சாய் வீசிய 4வது ஒவரில் மட்டும் இவர் இருவரும் சேர்ந்து 36 ரன்கள் குதித்தனர். 38 பந்துகள் மட்டுமே விளையாடிய இந்த ஜோடி 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. ஜான்சன் சார்லஸ் 27 பந்தில் 43 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து களமிறங்கிய ஹோப் 25 ரன்களுடனும், பவல் 26 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். மறு முனையில் சதத்தை நோக்கி வேகமாக முன்னேறிய பூரன் 53 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்கள் உடன் 98 ரன்கள் குவித்து சதம் விளாசும் வாய்ப்பை நழுவவிட்டார். இறுதியில் 20 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் சேர்த்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் குல்பதின் மைப் 2 விக்கெட் கைப்பற்றினார்.

இமாலய இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 114 ரன்கள் மட்டும் எடுத்து 104 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக இப்ராஹிம் ஜட்ரன் 38 ரன்களும், ஒமர்சாய் 23 ரன்களும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஒபேட் மெக்காய் 3 விக்கெட் கைப்பற்றினார்.

The post டி20 உலகக்கோப்பை: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 104 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: