யூரோ கோப்பை கால்பந்து: செர்பியாவை வீழ்த்தியது இங்கிலாந்து

கெல்சென்கிர்சென்: ஜெர்மனியில் நடைபெறும் யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் சி பிரிவு லீக் ஆட்டத்தில் செர்பியா-இங்கிலாந்து அணிகள் நேற்று மோதின. உலகத் தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள இங்கிலாந்தும், 33வது இடத்தில் உள்ள செர்பியாவும் சமபலத்தை களத்தில் வௌிப்படுத்தினர். பந்தை கடத்திச் செல்வது, பகிர்வது, கோல் அடிக்கும் முயற்சிகள் என திறன் வெளிப்பாட்டில் இரு அணிகளும் சளைக்காமல் ஈடுகொத்து மல்லுக்கட்டின.
ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் புகயா சாகா தட்டித்தந்த பந்தை நட்சத்திர வீரர் ஜூட் பெல்லங்காம் தலையால் முட்டி கோலாக்கினார்.

அதனால் இங்கிலாந்து 1-0 என முன்னிலைப்பெற்றது. இடைவேளை வரை இதே நிலை நீடித்தது. 2வது பாதியில் இரு அணிகளும் கோலடிக்க கடுமையான முயற்சிகள் மேற்கொண்டும், எதுவும் பலனளிக்கவில்லை. விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து 1-0 என்ற கோல் கணக்கில் முதல் வெற்றியை பதிவு செய்தது. சிறப்பாக விளையாடியும் செர்பியா முதல் ஆட்டத்தில் ஏமாற்றத்தை சந்தித்தது. பெல்லங்காம் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

The post யூரோ கோப்பை கால்பந்து: செர்பியாவை வீழ்த்தியது இங்கிலாந்து appeared first on Dinakaran.

Related Stories: