இந்தியா-தெ.ஆப்ரிக்கா பெண்கள் தொடர்: இன்று பெங்களூரில் முதல் ஒருநாள்


பெங்களூர்: இந்தியா வந்துள்ள லாரா வால்வார்ட் தலைமையிலான தென் ஆப்ரிக்கா பெண்கள் அணி தலா 3ஒருநாள், டி20 மற்றும் ஒரு டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. ஒருநாள் தொடர் பகல்/இரவு ஆட்டமாக பெங்களூரில் மட்டும் நடக்கிறது. முதல் ஆட்டம் இன்றும், 2வது ஆட்டம் ஜூன் 19, 3வது ஆட்டம் ஜூன் 23ம் தேதிகளில் நடைபெற உள்ளன. தொடர்ந்து டெஸ்ட் ஆட்டம் ஜூன் 28ம் தேதி முதல் ஜூலை 1ம் தேதி வரை சென்னையில் நடைபெறும். அதனையடுத்து இந்திய பெண்கள் அணிக்கு எதிரான டி20 தொடரில் தெ.ஆ பெண்கள் அணி களம் காண உள்ளது. அந்த டி20 தொடரும் சென்னையில் இரவு நேர ஆட்டங்களாக நடைபெறும். இந்த 3 ஆட்டங்களும் முறையே ஜூலை 5, 7, 9 தேதிகளில் நடைபெறும்.

இந்தியா, தான் விளையாட உள்ள ஒருநாள், டி20, டெஸ்ட் தொடர்களுக்கு ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் களம் காண உள்ளது. ஆனால் அணிகளில் மாற்றம் உண்டு. தெ.ஆ ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களுக்கு களமிறங்கும் அணியில் மாற்றமில்லை. எனினும் டி20 தொடருக்கான அணி இன்னும் அறிவிக்கவில்லை. ஆண்கள் டி20 உலக கோப்பை பெரிதாக கவனம் ஈர்க்காத நிலையில் உள்ளூரில் நடைபெற உள்ள இந்தியா-தென் ஆப்ரிக்கா பெண்கள் தொடர் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேருக்கு நேர்
* இந்த 2 அணிகளும் விளையாடிய 28ஒருநாள் ஆட்டங்களில், இந்தியா 15, தெ.ஆ 12லும் வென்றுள்ளன. ஒரு ஆட்டம் கைவிடப்பட்டது.

* இவ்விரண்டு அணிகளும் மோதிய ஆட்டங்களில் அதிகபட்சமாக தெ.ஆ 275, இந்தியா 274ரன் விளாசியுள்ளன. குறைந்தபட்சமாக தெஆ 112, இந்தியா 109 ரன் சேர்த்துள்ளன.

* கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் தென் ஆப்ரிக்கா 4-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

* இன்னும் ஒரு விக்கெட் எடுத்தால் ஒரு நாள் ஆட்டங்களில் 100 விக்கெட் கைப்பற்றிய சாதனையை படைக்க ராஜஸ்வரி கெய்க்வாட், தீப்தி சர்மா ஆகியோர் காத்திருக்கின்றனர். ஆனால் ஒருநாள் அணியில் தீப்திக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்துள்ளது.

The post இந்தியா-தெ.ஆப்ரிக்கா பெண்கள் தொடர்: இன்று பெங்களூரில் முதல் ஒருநாள் appeared first on Dinakaran.

Related Stories: