போடிமெட்டு சாலையில் 11வது முறையாக நிலச்சரிவு-3 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

போடி : போடிமெட்டு மலைச்சாலையில் 11வது முறையாக மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.தேனி மாவட்டம், போடியிலிருந்து கேரளாவுக்கு செல்லும் போடிமெட்டு மலைச்சாலை 17 கொண்டை ஊசி வளைவுகளுடன் அமைந்துள்ளது. இந்த மலைச்சாலையில் கனமழையால், கடந்த சில வாரமாக தொடர் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. நேற்று மலைச்சாலையில் 11வது முறையாக 8வது கொண்டை ஊசி வளைவில்  நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில், பாறைகள், மரம், செடி, கொடிகள் சாலையில் சரிந்து விழுந்தன. இதனால் சுமார் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை, போலீசார் ஜேசிபி மூலம் பாறைகளை உடைத்து அப்புறப்படுத்தினர். கடந்த 3 வாரத்திற்கும் மேலாக தொடர்மழையால் போடிமெட்டு மலைச்சாலையில் நிலச்சரிவு ஏற்படுகிறது. எனவே, வாகன ஓட்டிகள் கவனத்துடன் சாலையை கடந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: