உங்களின் தூதரக பாஸ்போர்ட்டை ஏன் ரத்து செய்யக்கூடாது? : பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு வெளியுறவு அமைச்சகம் நோட்டீஸ்

பெங்களூரு : பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கர்நாடகா மாநிலம் ஹாசன் தொகுதி மஜத எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தையும் ஹொலெநரசிபுரா தொகுதி எம்.எல்.ஏவுமான ரேவண்ணா ஆகிய இருவர் மீதும் பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. பாலியல் வழக்கில் சிக்கி வெளிநாட்டில் பதுங்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருப்பதுடன், இன்டர்போல் ப்ளூ கார்னர் நோட்டீசும் வெளியிட்டுள்ளது.

பிரஜ்வல் ரேவண்ணாவை இந்தியாவிற்கு அழைத்துவர எஸ்.ஐ.டி தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது. பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் என்று எஸ்.ஐ.டி வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியது. பிரஜ்வலின் டிப்ளோமேடிக் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் சித்தராமையாவும் கடிதம் எழுதியிருந்தார். ஆனால் இதுவரை ஒன்றிய அரசு இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில், அரசு அதிகாரிகளுக்கான சிறப்பு பாஸ்போர்ட்டை ஏன் ரத்து செய்யக் கூடாது என விளக்கம் கேட்டு பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு வெளியுறவு அமைச்சகம் ஷோக்காஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் கர்நாடக அரசு கூறியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து பதில் அளிக்குமாறும் நோட்டீஸில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதனிடையே அரசு உயர் அதிகாரிகளுக்கான சிறப்பு பாஸ்போர்ட் ரத்தானால் பிரஜ்வல் வெளிநாட்டில் இருப்பது சட்டவிரோதமாகிவிடும். வெளிநாட்டில் தங்கியிருப்பது சட்டவிரோதமானால் பிரஜ்வல் ரேவண்ணா நாடு திரும்புவது கட்டாயமாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post உங்களின் தூதரக பாஸ்போர்ட்டை ஏன் ரத்து செய்யக்கூடாது? : பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு வெளியுறவு அமைச்சகம் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: