தற்போது இரண்டாண்டு தமிழ் முதுகலைப் பட்டப்படிப்பு (இலக்கியத் துறை) மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. இவ்வகுப்பில் சேர்க்கைப்பெறும் மாணவர்களுள் தெரிவின் அடிப்படையில் 15 மாணவர்களுக்கு மட்டும் தமிழ்நாடு அரசு வழங்கும் ரூ.2000/- கல்வி உதவித் தொகை திங்கள்தோறும் வழங்கப்படும், மேற்கண்ட இரண்டாண்டு தமிழ் முதுகலைப் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை (இலக்கியத் துறை) படிப்பில் பயில விரும்புவோர் சேர்க்கைத் தொடர்பான விதிமுறைகள்/தகவல்கள் மற்றும் விண்ணப்பத்தை www.ulakaththamizh.in என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளலாம் அல்லது நேரில் பெற்றுக் கொள்ளலாம். இருபாலருக்கெனத் தனித்தனியே கட்டணமின்றி தங்கும் விடுதி வசதி உள்ளது.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இறுதியாகப் படித்த கல்விச் சான்று மற்றும் மாற்றுச்சான்றிதழ் (சான்றொப்பமிடப்பட்டது) நகலுடன் இணைத்து நேரில் (அ) அஞ்சலில் இயக்குநர் (கூ.பொ.), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை-600113 (தொலைபேசி 044-22542992) என்ற முகவரியில் 21.06.2024 – வெள்ளிக்கிழமைக்குள் அளித்தல் வேண்டும். மேலும் தகவல்பெற மேற்கண்ட முகவரியில் தொடர்பு கொண்டோ அல்லது நிறுவன வலைத் தளத்தில் பார்த்தோ தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post 2024ம் ஆண்டுக்கான தமிழ் முதுகலைப் பட்டம் படிப்பதற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியீடு appeared first on Dinakaran.