வெள்ளப்பெருக்கால் ஆம்பூர், விழுப்புரம், திருத்தணி பகுதிகளில் தரைப்பாலங்கள் மூழ்கின

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே மாதனூர் - உள்ளி இடையே உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் முற்றிலுமாக மூழ்கியது. விழுப்புரம் சாலாமேடு, திருப்பாச்சனூருக்கு செல்லும் தரைப்பாலம் மழைநீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திருத்தணி நாராயணபுரம் அருகே கொற்றலை ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியது. பிச்சாட்டூர் அணையிலிருந்து ஆரணியாற்றில் 6,000 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டதால் காளஹஸ்தி சாலை மூடப்பட்டது.

Related Stories: