ஊத்துக்கோட்டையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதிய உணவு: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ வழங்கினார்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் மக்களுக்கு உணவு பொருட்களை டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ  வழங்கினார். ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையில் இருந்து நேற்று முன்தினம் 11 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், ஊத்துக்கோட்டை பேரூராட்சி கலைஞர் நகர், கொய்யாதோப்பு,  செல்லியம்மன் கோயில், அருந்ததி காலனி பகுதி வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால், மழைநீர் தேங்கிய பகுதிகளில் மக்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்துகொண்டு 1,500 பேருக்கு உணவு வழங்கினார். பின்னர், மழைநீர் தேங்கிய இடங்களை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், தலைமை செயற்குழு உறுப்பினர் பி.ஜெ.மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் அபிராமி குமரவேல், நகர செயலாளர் அப்துல் ரஷீத் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். இதில், பூண்டி  ஒன்றிய செயலாளர்கள் மணிபாலன்,   டி.கே.சந்திரசேகர், ரவி, துணைச்செயலாளர் நாகராஜ், பெற்றோர் - ஆசிரியர் கழக தலைவர் தமிழ்செல்வம், இளைஞரணி அமைப்பாளர் ரகீம், கோல்டுமணி, பார்த்திபன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, பெரியபாளையம் அருகே கக்கன்ஜி நகர்,  தண்டுமாநகர்,  அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழை நீர் புகுந்ததால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு திமுக சார்பில் 500 பேருக்கு கும்மிடிபூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் உணவு வழங்கினார். அப்போது, ஒன்றிய செயலாளர் மூர்த்தி,  துணை தாசில்தார் நடராஜன்,  வக்கில் சீனிவாசன், முனுசாமி ஊராட்சி தலைவர் லட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: