லக்கிம்பூர் சம்பவத்தில் விசாரணைக்கு ஆஜராகாத ஒன்றிய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா..நேபாள எல்லையில் தலைமறைவாகி இருப்பதாக தகவல்..!!

லக்னோ: லக்கிம்பூர் விவசாயிகள் கொலை வழக்கில் ஒன்றிய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா காவல்துறை விசாரணைக்கு ஆஜராகாமல் தப்பியோடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த ஞாயிறு அன்று கறுப்புக்கொடி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காரை விட்டு மோதியதில் 4 விவசாயிகள் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இருவரை கைது செய்துள்ள உத்திரப்பிரதேச காவல்துறையினர் ஆஷிஷ் மிஸ்ரா இன்று காலை 10 மணிக்கு முன்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். சம்மன் தொடர்பாக ஆஷிஷ் மிஸ்ராவின் வீட்டில் நோட்டீஸும் ஒட்டப்பட்டது. ஆனால் ஆஷிஷ் மிஸ்ரா விசாரணைக்கு ஆஜராகாமல் தப்பியோடியுள்ளார். அவரது செல்போன் சிக்னலை வைத்து தேடியதில் நேபாள எல்லையில் தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே ஆஷிஷ் மிஸ்ராவுக்கு உத்திரப்பிரதேச போலீசார் 2வது சம்மன் அனுப்பியுள்ளனர்.

Related Stories: