கடவூர் அருகே சேர்வைகாரன்பட்டியில் சிறப்பு தணிக்கை கிராமசபை கூட்டம்

தோகைமலை, : கடவூர் அருகே முள்ளிப்பாடி ஊராட்சி சேர்வைகாரன்பட்டியில் நடந்த சிறப்பு தணிக்கை கிராம சபை கூட்டத்தில் புதிய பணிகளுக்கு தீர்மானம் நிறைவேற்றபட்டது. கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியம் கடவூர் அருகே முள்ளிப்பாடி ஊராட்சியில் 100 நாள் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பணிகள் மற்றும் பணியாளர்கள் செய்த பணிகள் குறித்து, சமூக தணிக்கை இறுதி செய்தல் சிறப்பு கிராமசபை கூட்டம், கடவூர்; ஒன்றிய ஆணையர் ராஜேந்திரன் மேற்பார்வையில் நடந்தது. முள்ளிப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட சேர்வைகாரன்பட்டியில் நடந்த இக்கூட்டத்திற்கு மூத்த குடிமகன் சந்தியாகு வேல்முருகன் தலைமை வகித்தார். முள்ளிப்பாடி ஊராட்சி மன்ற தலைவர்நீலா வேல்முருகன் முன்னிலை வகித்தார்.இதில் 2020-21 மற்றும் 2021-2022 ம் ஆண்டிற்கான முள்ளிப்பாடி ஊராட்சியில் 100 நாள் பணியாளர்களின் பணிவிபரங்கள், மொத்த செலவீனங்கள் மற்றும் பணியாளர்களின் ஊதியத்தின் விபரங்கள் என சமூக தனிக்கையாளர்களை கொண்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு அறிக்கைகளை கிராம சபையில் ஒப்புதல் பெற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் புதியபணிகளில் மரக்கன்றுகள் நடுதல், குளங்கள், மற்றும் வாhpகளை தூர்வாருதல், சாலைஓரம் பராமறிப்பு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர்ராமநாதன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலாளர்கணேசன் உள்பட ஒன்றிய பணி மேற்பார்வையாளர், வட்டார வள அலுவலர், வார்டு உறுப்பினர;கள், மக்கள் நல பணியாளர், பணித்தளப் பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்….

The post கடவூர் அருகே சேர்வைகாரன்பட்டியில் சிறப்பு தணிக்கை கிராமசபை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: