தெற்கு டெல்லி மாநகராட்சியில் 1,100 சிறப்பு கல்வியாளர்களை நிரப்புவது எப்போது? ஐகோர்ட் அதிரடி கேள்வி

புதுடெல்லி: தெற்கு மாநகராட்சியின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் பயிலும் சிறப்பு குழந்தைகளுக்கான சிறப்பாசிரியர்கள் நீண்டகாலமாக நிரப்பப்பாமல் உள்ளது. இதனை சுட்டிக்காட்டி, தெற்கு மாநகராட்சி பள்ளிகளில் காலியாக உள்ள 1100 சிறப்பாசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப டெல்லி அரசு, டிஎஸ்எஸ்எஸ்பி மற்றும் தெற்கு மாநகராட்சிக்கு உத்தரவிடக்கோரி தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், காலிப்பணியிடங்கள் குறித்து டிஎஸ்எஸ்எஸ்பி துறைக்கு தெரிவித்து ஆட்களை தேர்வு செய்து தர கேட்டுக்கொள்ளுமாறு தெற்கு மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. இதற்காக மூன்று வாரகாலம் அவகாசம் வழங்கி யதோடு, காலதாமதம் செய்து வருவதற்கு 25,000 பேராதம் விதித்து உத்தரவிட்டது.  ஆனால், உயர் நீதிமன்றம் வழங்கி மூன்றுவாரம் முடிந்தும் இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதையடுத்து, தெற்கு மாநகராட்சிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொண்டு நிறுவனம் தொடர்ந்தது. இந்த மனு நேற்று உயர் நீதிமன்ற நீதிபதி நஜ்மி வாசிரி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, காலிப்பணியிடங்களை தெரிவித்து அவற்றை நிரப்ப டிஎஸ்எஸ்எஸ்பியிடம் கோராததற்கு தெற்கு மாநகராட்சிக்கு விதிக்கப்பட்ட அபராத்தொகை 25,000ஐ ரத்து செய்ய கோரிய எம்சிடி கோரிக்கையை ஏற்க மறுத்து உத்தரவிட்டார். அப்போது எம்சிடி சார்பில் ஆஜராக வக்கீல், எஸ்டிஎம்சியின் கீழ் காலியாக உள்ள 1132 சிறப்பாசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆனால், இந்தாண்டு இறுதி வரை கால அவகாசம் எடுத்துக்கொண்டுள்ளதை ஏற்க முடியாது என்று கூறிய நீதிபதி, காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடுவது, ஆட்கள் தேர்வு, பணியமர்த்தல், ஆகியவை எந்தெந்த தேதிகளில் விரைந்து முடிக்க முடியும் என்பது பற்றி மீண்டும் புதிய அட்டவணை தயாரித்து சமர்ப்பிக்குமாறு கூறி எம்சிடி கமினஷருக்கு உத்தரவிட்டு வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை பிப்ரவரி 23ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Related Stories: