காஞ்சிபுரம் அருகே விளம்பர பலகை அமைக்கும் பணியின் போது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

காஞ்சிபுரம்: விளம்பர பலகை அமைக்கும் பணியின் போது, மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் காந்தி சாலையில் வழக்கறுத்தீஸ்வரர் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இதன் எதிர்புறத்தில் உள்ள கட்டிடத்தில் தனியார் நிறுவனம் தங்களது விளம்பர பலகை அமைக்கும் பணியை மேற்கொண்டு வந்தது. இதற்காக இளங்கோ என்பவர் விளம்பரப்பலகை வைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது அவ்வழியே செல்லும் உயரழுத்த மின்சார கம்பி மீது பேனர் பட்டதால் இளங்கோவன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Related Stories: