கர்நாடக மாநில அரசின் புதிய தலைமை செயலாளராக ரவிகுமார் நியமனம்

பெங்களூரு: மாநில அரசின் தலைமை செயலாளராக இருக்கும் டி.எம்.விஜயபாஸ்கரின் பதவி காலம் இன்றுடன் முடிகிறது. இந்நிலையில், காலியாகும் பதவியை பிடிக்க மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான எஸ்.என்.பிரசாத், ரஜனிஷ்கோயல், பி.ரவிகுமார் உள்பட பலர் முயற்சித்து வந்தனர். இதில் பணிமூப்பு அடிப்படையில் தற்போது கூடுதல் தலைமை செயலாளராக இருக்கும் பி.ரவிகுமாரை புதிய தலைமை செயலாளராக நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 1984ம் ஆண்டு கர்நாடக கேடரில் ஐஏஎஸ் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்ட அவர், பல மாவட்டங்களில் கலெக்டர் உள்பட பல்வேறு பொறுப்புகளை சிறப்பாக கவனித்துள்ளார். புதிய தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள ரவிகுமார் இன்று முறைப்படி பொறுப்பேற்று கொள்கிறார்.

Related Stories: