கர்நாடகாவில் போதை ‘ரேவ் பார்ட்டி’: 2 நடிகைகள் உட்பட 86 பேருக்கு சம்மன்.! பரிசோதனையில் அம்பலமானதால் அதிர்ச்சி

பெங்களூரு: கர்நாடகாவில் ‘ரேவ் பார்ட்டி’யில் பங்கேற்ற, இரண்டு தெலுங்கு நடிகைகள் உட்பட 86 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியது அம்பலமாகி உள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூரு அடுத்த ஹெப்பகோடி பண்ணை வீட்டில், பிறந்த நாள் என்ற பெயரில் கடந்த 19ம் தேதி இரவு ‘ரேவ் பார்ட்டி’ நடப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் சோதனை நடத்தியதில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள ஹைட்ரோ கஞ்சா, கோகைன் ஆகிய போதைப் பொருட்கள் சிக்கின. இந்த ‘ரேவ் பார்ட்டி’ விருந்திற்கு ஏற்பாடு செய்த நாகபாபு, அருண்குமார், வாசு, ரனதீர், முகமது அபுபக்கர் சித்திக், ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

அப்போது பண்ணை வீட்டில் இருந்த தெலுங்கு நடிகைகள் ஹேமா, ஆஷி ராய் உட்பட 101 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவர்களின் ரத்தம், முடி மாதிரி ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று வெளியான ஆய்வின் முடிவில் 27 பெண்கள் உட்பட 86 பேர் போதைப் பொருள் உட்கொண்டது அம்பலமாகி உள்ளது. இவர்களில் தெலுங்கு நடிகைகள் ஹேமா, ஆஷி ராயும் போதைப் பொருள் பயன்படுத்தி உள்ளனர். இதையடுத்து 86 பேருக்கும் விசாரணைக்கு ஆஜராக மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். போதைப் ெபாருள் வழக்கில் 2 நடிகைகள் உட்பட 86 பேர் சிக்கிய விவகாரம் கர்நாடகா, ெதலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The post கர்நாடகாவில் போதை ‘ரேவ் பார்ட்டி’: 2 நடிகைகள் உட்பட 86 பேருக்கு சம்மன்.! பரிசோதனையில் அம்பலமானதால் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: