தூத்துக்குடி கீதா ஜீவன், பேராவூரணி கோவிந்தராசு மேலும் 2 எம்எல்ஏவுக்கு கொரோனா உறுதி

சென்னை: தமிழகத்தில் ஏற்கனவே, திமுக, அதிமுகவை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் கொரோனாவால் பாதிப்புக்குள்ளாயினர். இந்நிலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், தூத்துக்குடி தொகுதி எம்எல்ஏவுமான கீதாஜீவனுக்கு (51) நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரது மகளுக்கு காய்ச்சல் இருந்ததால் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கீதாஜீவன் எம்எல்ஏ, அவரது மகள், மருமகன் ஆகிய 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மூவரும் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக்கொண்டனர். தகவலறிந்த திமுக தலைவர் முக.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அதிமுக எம்எல்ஏ கோவிந்தராசு (70)வும் நேற்று கொரோனா தொற்று உறுதியாகி தஞ்சை அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: