கொரோனா நோயாளிகளுக்கு பி.சி.ஜி தடுப்பு மருந்து: ஓமந்தூரார் மருத்துவமனையில் முதற்கட்ட சோதனை; தமிழக அரசு முயற்சி ஜெயிக்குமா ?

சென்னை : கொரோனா நோயாளிகளுக்கு புதியதாக பிசிஜி என்ற தடுப்பூசி வகையிலான மருந்து வழங்கப்படவுள்ளது.  செய்யப்பட உள்ளது. உலகை ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸை மொத்தமாகப் புவியிலிருந்து விரட்டியடிப்பதற்கு மருந்து அல்லது தடுப்பூசி மட்டுமே ஒரே வழி என அறிவியலாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.ஆனால் இந்த வருட இறுதி அல்லது அடுத்த வருடத்தில்தான் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அனைத்து நாடுகளும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவ்வப்போது இருக்கும் அறிகுறிகளுக்கு ஏற்றவாறு அந்தந்த நாட்டு மருத்துவர்கள் நிர்ணயித்த மருந்துகள் மட்டுமே தற்போது வரை வழங்கப்பட்டு வருகிறது.

 

அதே போன்று, கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு சிகிச்சை முறைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தற்பொழுது பிசிஜி (Bacillus Calmette–Guérin) என்ற தடுப்பூசி வகையான மருந்தினை கொரோனா நோயாளிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.வெளிநாடுகளில் இந்த சிகிச்சையானது நல்ல பலனை வழங்கி வருவதால் தமிழகத்திலும் செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் மருத்துவ குழு ஒன்று அமைத்து முதற்கட்ட சோதனை தொடங்கியுள்ளது.இந்த மருந்தை நோயாளிகளுக்கு செலுத்துவதன் மூலம் நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிக்கும் என்று தெரியவந்துள்ளது.

பி.சி.ஜி காசநோய் தடுப்பூசி

பி.சி.ஜி எனப்படும் காசநோய் தடுப்பூசி போடாத நாடுகளில் கொரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகள், பி.சி.ஜி தடுப்பூசி போடப்படும் நாடுகளுடன் ஒப்பிடும் போது, 6 மடங்கு அதிகமாக உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜான்ஸ் ஹாப்கின்ஸின் விஞ்ஞானிகள் நூற்றாண்டு பழமையான  பி.சி.ஜி எனப்படும் காசநோய் தடுப்பூசியை பயன்படுத்தும் நாடுகளில் இறப்பு விகிதம் 5.8 மடங்கு குறைவாக இருப்பதைக் கண்டறிந்தனர்.பி.சி.ஜி, அல்லது பேசிலஸ் கால்மெட்-குய்ரின், காசநோய்க்கான தடுப்பூசி ஆகும். பி.சி.ஜி தடுப்பூசி போடப்பட்டவர்களின் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரித்து காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: