மருத்துவமனையில் இருந்து திரும்பிய பின் தலைமை செயலகம் வந்தார் துணை முதல்வர் ஓபிஎஸ்

சென்னை: உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனை சென்று வந்தபின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தலைமை செயலகம் வந்தார்.துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 24ம் தேதி (ஞாயிறு) சென்னை, அடையார் கிரின்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் இருந்தபோது திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை, தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. பின்னர் சிகிச்சை முடிந்து ஓ.பன்னீர்செல்வம் கடந்த 25ம் தேதி மாலை வீடு திரும்பினார்.

இந்நிலையில், 2 நாள் ஓய்வுக்கு பிறகு நேற்று காலை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை செயலகம் வந்து வழக்கமான பணிகளில் ஈடுபட்டார். அதன்படி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நேற்று தலைமை செயலகத்தில் சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் தேசிய மாவட்ட பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் ஆகியோருடன் தேனி மாவட்ட பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளிடம், தேனியில் புதிதாக தொடங்கப்பட்ட சட்டக்கல்லூரிக்கு நிரந்தர கட்டிடங்கள் கட்டுவதற்கு உண்டான வரை படங்கள் மற்றும் மதிப்பீடுகள் குறித்து ஆலோசனை செய்தார்.

Related Stories: