மது கிடைக்காத விரக்தியில் நடிகை மனோரமாவின் மகன் தற்கொலை முயற்சி: தனியார் மருத்துவமனையில் சிகிச்சை

சென்னை: தி.நகர் நீலகண்டா மேத்தா தெருவில் வசித்து வருபவர் பூபதி (64). மறைந்த நடிகை மனோரமாவின் மகன். இவருக்கு மது பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. ஊரடங்கு காரணமாக மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளதால் பூபதி மனஉளைச்சலில் இருந்ததாகவும் தூக்கம் வராமல் தவித்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த 6ம் தேதி இரவு அதிக தூக்க மாத்திரை சாப்பிட்டு உள்ளார். நேற்று இரவு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் அதிர்ச்சியடைந்த அவருடைய மகன் அவரை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தற்போது நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் மது கிடைக்காமல் விரக்தியில் அதிக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாரா என்று மாம்பலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: