திருமங்கலத்தில் பத்ரகாளி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

திருமங்கலம்: திருமங்கலம் பத்ரகாளி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். திருமங்கலம் நகரின் நடுவே அமைந்துள்ளது பத்ரகாளி மாரியம்மன் கோயில். இங்கு மகா கும்பாபிஷேகம் நேற்று கோலகலமாக நடைபெற்றது. முன்னதாக கடந்த பிப். 3ம் தேதி விக்னேஷ்வரபூஜை, ஆனுக்கை பூஜை நடந்தது. தொடர்ந்து கடந்த 2 நாட்களாக யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. நேற்று நேற்று காலை 6 மணிக்கு நான்காம் கால விக்னேஸ்வராதி, மகாபூர்ணா ஹீதி தீபாரதனை நடந்தது. தொடர்ந்து காலை 9 மணிக்கு கடம் புறப்படாகி கோயிலில் வலம் வந்து மூலவிமானம், மகாகணபதி உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.

பின்னர் காலை 11 மணியளவில் மூலவர் பத்ரகாளிமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை நடந்தது. இதில் திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6.30 மணிக்கு அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Related Stories: