நாங்குநேரியில் வட இந்திய சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

நாங்குநேரி: நாங்குநேரியில் வட இந்திய சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.108 திவ்ய தேசங்களில் சுயம்பு சேத்திரமாக நாங்குநேரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது தைமாத விடுமுறைக்காலம் என்பதால் வட இந்தியாவிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் நாங்குநேரி வந்துள்ளனர். பீகார், மத்தியப்பிரதேசம் டெல்லி போன்ற வட மாநிலங்களில் தற்போது கடுமையான குளிர் நிலவுவதால் அப்பகுதியினர் தென் மாநிலங்களுக்கு சுற்றுலா வருகின்றனர். அவர்கள் விரும்பி வரும் பட்டியலில் நாங்குநேரியும் உள்ளது.

இங்கு வரும் வட இந்திய சுற்றுலா பயணிகள் நாங்குநேரி பெரிய குளத்தில் குளித்த பின் சாலையோரம் அமர்ந்து ரொட்டி, பருப்பு சமைத்து சாப்பிடுகிறார்கள். பின்னர் வானமாமலை பெருமாளை தரிசித்தும் கோவில் மண்டபத்தில் தங்கி ஓய்வெடுத்த பின்பும் பிற இடங்களுக்குச் சுற்றுலா செல்கின்றனர். அடுத்து இரண்டு மாதங்கள் நாங்குநேரிக்கு வட இந்திய சுற்றுலா பயணிகளின் வருகை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: