திமுக கூட்டணியில் CPIக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு.. அமைதியான தமிழ் மண்ணை பாஜக சீர்குலைக்க துடிப்பதாக வீரபாண்டியன் பேட்டி

சென்னை : திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். 3 கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் திமுக – இந்திய கம்யூனிஸ்ட் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இறுதியானது. ஏற்கனவே காங்கிரஸ், மதிமுக, ஐயூஎம்எல், மமக, கொமதேகவுடன் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 2021 தேர்தலில் இந்திய கம்யூ. கட்சிக்கு 6 தொகுதி ஒதுக்கிய நிலையில், வரும் தேர்தலில் 5 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2021 தேர்தலில் இந்திய கம்யூ. கட்சிக்கு 6 தொகுதி ஒதுக்கிய நிலையில் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதையடுத்து, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கேட்டுப் பெற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு எடுத்துள்ளது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மு. வீரபாண்டியன்,” அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பேச்சு கண்டனத்திற்குரியது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றிய தவெக நிர்வாகியின் கருத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியை வீழ்த்துவோம். அமைதியான தமிழ் மண்ணை பாஜக சீர்குலைக்க துடிக்கிறது. பாஜக பதற்ற அரசியலை இன்று சுமந்து வருகிறது. பாஜகவை வீழ்த்தவேண்டும் என்பதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கு. சுயமரியாதைக்கு பாதிப்பு ஏற்படவில்லை; திமுக அதுபோன்று கட்டளை இடவில்லை. 3 கட்ட பேச்சுவார்த்தைகளிலும் எங்களுக்கு திமுக அழுத்தம் தரவில்லை. திமுக தலைமையிலான கூட்டணி, கொள்கை கூட்டணி. பாஜகவை வீழ்த்தி இந்தியாவுக்கே ஒரு நல்லதொரு அரசியல் செய்ய வேண்டும். பாஜக வீழ்த்துவதுதான் முதல் அரசியல் கடமை. வெற்றி தோல்வியை வைத்து எடைபோடக்கூடாது, அரசியலில் வெற்றி பெற வேண்டும்.”இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: