லட்சத்தீவு கடற்பகுதியில் கரை ஒதுங்கிய 7 மீனவர்கள் மீட்பு

லட்சத்தீவு  : ஏமன் நாட்டிற்கு மீன் பிடிக்க சென்ற படகு பழுதால் லட்சத்தீவு கடற்பகுதியில் கரை ஒதுங்கிய 7 மீனவர்கள் மீட்கப்பட்டனர். மீனவர்களை மீட்க உறவினர்கள் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து தமிழக அரசு துரித நடவடிக்கை எடுத்ததாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். லட்சத்தீவு கடற்பகுதியில் கரை ஒதுங்கிய 7 மீனவர்களையும் மீட்ட கடலோர காவல்படையினர் கொச்சி துறைமுகத்திற்கு அழைத்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் மேலும் தெரிவித்தார். மீட்கப்பட்ட மீனவர்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டிய வசதிகளை ட்ராமிழக அரசு செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories: