வடபொன்பரப்பியில் சமூக விரோதிகளின் கூடாரமாகிய கிராம சேவை மைய கட்டிடம்

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்துள்ளது வடபொன்பரப்பி ஊராட்சி. இந்த ஊராட்சில்  கடந்த 2015ம் ஆண்டு கிராம சேவை மைய கட்டிடம் கட்டும்பணி தொடங்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகள் ஆகியும் பணிகள் முடியாமல் கிடப்பகில் கிடக்கிறது. இதனால் இந்த கட்டிடம் தற்போது சமூக விரோதிகள் கூடாரமாக மாறிவருகிறது. பகல் மற்றும் இரவு நேரங்களில் அங்கு மது அருந்துவது உள்ளிட்ட பல சமூக விரோத செயல்கள் நடந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனால் கிராம சேவை கட்டிடத்திற்குள் காலி மதுபாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள் அதிக அளவில் காண முடிகிறது.

இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று இப்பகுதி மக்கள் தெரிவித்தனர். சமூக விரோத செயல்களை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பணிகளை முடித்து கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: