நாகேஷ்-கருணாகரன் நினைவு கால்பந்து மூலக்கொத்தளம் கிளப் சாம்பியன்

சென்னை: மாவட்ட அளவில் 14வயதுக்கு உட்பட்டவர்களுக்கான நாகேஷ்  கருணாகரன் நினைவு கால்பந்து போட்டியில் மூலக்கொத்தளம் கிளப் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் நாகேஷ் - கருணாகரன் நினைவு கால்பந்து போட்டி  சென்னையில் நடைபெற்றது. மாவட்ட அளவிலான இந்தப் போட்டியில் வியாசர்பாடி, ராயபுரம், யானை கவுனி, எழில் நகர், கேஎம் கார்டன் என 11 கால்பந்து கிளப்களைச் சேர்ந்த 14வயதுக்கு உட்பட்டவர்களுக்கான அணிகள் பங்கேற்றன.

இறுதிப் போட்டியில் மூலக்கொத்தளம் கால்பந்து கிளப் - காத்படா கால்பந்து கிளப் அணிகள் மோதின. அதில் மூலக்கொத்தளம் கிளப் அணி 3-2 என்ற கோல் கணக்கில் போராடி வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. வெற்றி பெற்ற அணிக்கும், சிறந்த வீரர்களுக்கும் மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயகுமார் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் வண்ணாரப் பேட்டை காவல்நிலைய ஆய்வாளர் ரவி, தொழிலதிபர்கள் முருகேசன், பாண்டியன், சமூக ஆர்வலர்கள் சண்முகம், மகிமைதாஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

Related Stories: