சென்னை: டிரைவிங் லைசென்சில் முகவரி மாற்றம் செய்ய இனி தடையில்லா சான்றிதழ் (என்.ஓ.சி.,) கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சாலை போக்குவரத்து விதிகளின் படி ைபக், பயணிகள் வாகனம் மற்றும் சரக்கு வாகனம் ஓட்டுவதற்கு வட்டார போக்குவரத்து துறை பல்வேறு படிநிலைகளுக்கு பிறகு டிரைவிங் லைசென்ஸ் வழங்குகிறது. வாடகை அல்லது பணி நிமித்தமாக வேறு இடங்களுக்கு வீடு மாறுவது உண்டு. அப்போது அவர்கள் டிரைவிங் லைசென்சில் உள்ள பழைய முகவரியை மாற்ற வேண்டும். அதற்கு ஏற்கனவே லைசென்ஸ் பெற்ற ஆர்டிஓ அலுவலகத்தில் என்.ஓ.சி. எனப்படும் தடையில்லா சான்று பெற வேண்டும். அதன் பிறகே முகவரியில் மாற்றம் செய்து கொடுக்கப்படும். இந்த நடைமுறையில் ஏராளமான சிக்கல் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது ஆர்டிஓ அலுவலகங்கள் ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே லைசென்ஸ் பெற்றவர்களின் முழு விபரமும் ‘சாரதி’ என்ற சாப்ட்வேரில் சேமித்து வைக்கப்படுகிறது.