ஜெயலலிதா பற்றி கேகேஎஸ்எஸ்ஆர் கூறியதை யாரும் ஏற்க மாட்டார்கள்: ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

சென்னை: இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:சென்னை, சைதாப்பேட்டையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஜெயலலிதா பற்றி பேசியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. வருவாய்த்துறை அமைச்சரின் இந்த பேச்சுக்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஜெயலலிதா அரசியலுக்கு வருவதற்கு முன்பே திரைத்துறையில் அறிமுகமாகி, நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர். ஜெயலலிதாவை எம்ஜிஆர் அரசியலுக்கு அறிமுகம் செய்து வைத்தார். சத்துணவு திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை கண்காணிக்கும் பொறுப்பு ஜெயலலிதாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜெயலலிதாவை அறிமுகப்படுத்தியதில் தனக்கும் பங்கு உண்டு என்று வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியுள்ளார். இதை யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.  அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளரான ஜெயலலிதாவை சிறுமைப்படுத்தி பேசுவது பொறுப்பற்ற செயல்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

The post ஜெயலலிதா பற்றி கேகேஎஸ்எஸ்ஆர் கூறியதை யாரும் ஏற்க மாட்டார்கள்: ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: