தொழில் முனைவோர் மேம்பாடு, புத்தாக்க நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் மாணவர்கள், புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு பரிசு வழங்கினார் அமைச்சர்தா.மோ.அன்பரசன்

சென்னை: சென்னை தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் மாணவர்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு நிதி உதவி மற்றும் பரிசுகளை வழங்கினார். தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் சார்பில் நடைபெறும் மாணவர்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது; ‘கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே, மாணவர்கள், புதிய கண்டுபிடிப்பாளர்களாக தொழில்முனைவோராகவும் உருவாக்கும் பணியில், முதல்வர் முனைப்புடன் செயலாற்றி வருகிறார். தொழில் முனைவோர்களுக்காக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தக்க நிறுவனத்தின் மூலம் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இன்று இந்த விழாவில், புத்தாக்க தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 25 மாணவ குழுக்கள் புத்தாக்க பற்றுச் சீட்டு திட்டத்தின் கீழ் 25 புதிய கண்டுபிடிப்பாளர்கள் என 50 புதிய கண்டுபிடிப்புக்கு ரூ.59 லட்சம் நிதி உதவி வழங்குவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இப்பரிசுகளை பெறும் மாணவர்கள் மற்றும் புதிய கண்டுப்பிடிப்பாளர்களுக்கு என் ராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த விழாவில் 146 கல்லூரிகளின் மாணவர்கள் பயன் பெறும் வகையில் 5 இடங்களில் தொழில்முனைவோர் மையங்கள்-Hubs வழங்கப்பட்டு உள்ளது. கழக நடத்திட ஆணைகளும் அரசு பொறுப்பேற்று இதுநாள் வரை தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மூலம்தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 30 ஆயிரத்து 794 இளைஞர்களுக்கும், ஊரக வளர்ச்சி, தகவல் தொழில் நுட்பம், தாட்கோ போன்ற அரசு துறைகளுடன் இணைந்து ஆயிரத்து 7259 இளைஞர்களுக்கும், புத்தாக்க தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 21 ஆயிரம் மாணவர்களுக்கும், 97 அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள Incubation Centres மூலம்68 ஆயிரம் மாணவர்களுக்கு என இதுவரை 3 லட்சத்து 27 ஆயிரம் இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொண்டார்.படித்த இளைஞர்கள், கல்வி பயிலும் மாணவர்கள் தங்களுடைய புதிய சிந்தனைகளை கண்டுப்பிடிப்புகளாக மாற்றதொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இளைஞர்கள் தங்களின்புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்ச்சி வடிவமைப்பு தயாரித்த பொருட்களை சந்தைப்படுத்த புத்தாக்க பற்று சீட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது. கடந்த நிதியாண்டு 2021-22-ல் 92 புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு ரூ. 4 கோடியே 46 லட்சம் நிதி உதவியும், நடப்பு ஆண்டு 2022-23-ல் 74 புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 49 கண்டுபிடிப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொண்டார். மேலும், இளம் தொழில்முனைவோர்களை வளர்த்தெடுக்க 97 அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் தொழில் வளர்காப்பகங்கள்- Incubation Centres அமைக்கப்பட்டு உள்ளது. இதில் இன்குபேஷன் 9 சென்ட்டர்களில் ரூ.20 கோடி மதிப்பீட்டில், புதிய இயந்திரங்கள் பரிசோதனை கூடங்கள்நிறுவப்பட்டு மேம்படுத்தப்பட்டு உள்ளன. அரசின் தொழில் வளர்காப்பகங்களை பயன்படுத்தி 555 மாணவர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் புதிய கண்டுபிடிப்புகளை தயாரித்து பலன் அடைந்துள்ளனர். அதற்கு சாட்சியாக இன்றைய கண்காட்சியில், இன்குபேட்டர் வசதியை பெற்ற 18 மாணவர்களும் புத்தாக்க பற்றுச் சீட்டு திட்டம் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற்ற 20 கண்டுபிடிப்பாளர்கள் வேளாண்மை, தோட்டக் கலை, மீன்வளம், உணவு தொழில்நுட்பம், மருந்தியல், உள்ளிட்ட துறைகளில் தங்களின் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி நமக்கு எல்லாம் பெருமை சேர்த்துள்ளனர். கல்லூரி மாணவர்கள் தங்கள் மாணவ பருவத்திலேயே புதிய தொழிலை தொடங்கும் வழிமுறைகளை தெரிந்து கொள்ள,தமிழகத்தில் உள்ள 1545 கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பயன் பெறும் வகையில் 30 இடங்களில் தொழில்முனைவோர் மையங்கள்-Hubs அமைக்கப்பட்டு தொழில் துவங்க உதவிகளும் ஆலோசணைகளும் வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டு இத்திட்டத்திற்கு ரூ.3 கோடியே 34 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொண்டார்.ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து மாண்புமிகு முதல்வர் அவர்கள் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் மீது தனி கவனம் செலுத்தி வருகிறார்கள். மாணவர்களிடம் புத்தாக்க சிந்தனையை உருவாக்கிட மாண்புமிகு முதல்வர் அவர்கள்கடந்த செப்டம்பர் மாதம் ரூ. 1 கோடி மதிப்பில் ‘பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தினை’ அறிவித்துள்ளார். இதன்படி, 4,343 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தொழில்முனைதல் பற்றிய விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இத்திட்டத்தின் மூலம் 40 மாணவ குழுக்களுக்கு சிறந்த புத்தாக்க சிந்தனைக்கு தலா 25 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை ரொக்க பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும் தெரிவித்துக்கொண்டார்.ஆட்சி பொறுப்பேற்ற குறுகிய காலத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் 3 வகையான சுயதொழில் திட்டங்களின் கீழ் ரூ.586 கோடி மானியத்துடன் ரூ.2,343 கோடி வங்கி கடனுதவி வழங்கப்பட்டு 16 ஆயிரத்து 746 படித்த இளைஞர்கள்புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறன். இளைஞர்கள் தொழில்கள் தொடங்க வாருங்கள் படித்து முடித்த பின் இளைஞர்கள் நீங்கள் வேலைக்கு செல்லுங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை வேலை கிடைக்க வில்லை என்று உங்கள் இளமைக் காலத்தை வீணடிக்காதீர்கள். இளைஞர்கள் அனைவரும் படித்து முடித்து விட்டு வேலை! வேலை என்று வேலை தேடி செல்லாமல், தொழில்களை தொடங்க முன் வாருங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொண்டார். மாணவர்கள்-இளைஞர்கள் தங்களின் புதிய கண்டுப்பிடிப்புகளை உருவாக்க அரசின் மூலம் வழங்கப்படும் ஆலோசனைகள் பயிற்சிகள் தொழில்நுட்ப உதவிகள் – நிதி உதவிகளை பெற்று புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து தமிழகத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லுவோம்’ என பேசினார்.நிகழ்ச்சில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசுச் செயலாளர் வி.அருண்ராய், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன இயக்குநர் முனைவர் ஜெ.யூ.சந்திரகலா, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.ர.ராகுல்நாத், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர், இ.கருணாநிதி, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ், மாமன்ற உறுப்பினர் வி.சங்கீதா, EDII கூடுதல் இயக்குநர் முத்துராமன் மற்றும் தொழில்முனைவோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்….

The post தொழில் முனைவோர் மேம்பாடு, புத்தாக்க நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் மாணவர்கள், புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு பரிசு வழங்கினார் அமைச்சர்தா.மோ.அன்பரசன் appeared first on Dinakaran.

Related Stories: