ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்திய வடமாநில வாலிபர் கைது

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் காவல் துணை கண்காணிப்பாளர் ரித்து உத்தரவின்பேரில் நேற்று ஆரம்பாக்கம் சிறப்பு காவலர் நாராயணன் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.  அப்போது ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து சென்னை நோக்கி வந்த தமிழக அரசு பேருந்தை   நிறுத்தி சோதனை செய்தபோது, வாலிபர் ஒருவர் வைத்திருந்த பையில் 4 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிப்பட்டது. விசாரணையில், அவர் டெல்லியைச் சேர்ந்த் ராஜ்குமார் (30) என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து சென்னை புறநகர் பகுதிகளில் விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். …

The post ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்திய வடமாநில வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: