துரந்தர் 2 தூக்கம் வரவைக்கும் படம்: திவ்யா கடும் தாக்கு

பெங்களூரு: சமீபத்தில் வெளியான ‘துரந்தர் 2’ படம், ஒன்றிய அரசின் பிரசார படம் என காட்டமாக கூறியிருந்தார் நடிகர் பிரகாஷ் ராஜ். இந்நிலையில் திவ்யா ஸ்பந்தனா கூறியிருப்பதாவது: துரந்தர் முதல் பாகத்தில், மக்கள் ஆரவாரமும் கைதட்டியும் உற்சாகமாக ரசித்தார்கள். அதில் ஒரு எனர்ஜியும் ஈடுபாடும் இருந்தது. ஆனால் துரந்தர் 2 படத்தில் அது எதுவுமே இல்லை. மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மேலும், ரன்வீர்தான் இந்தப் படத்தை தாங்கிப் பிடிக்கிறார் என்று சொல்பவர்களுக்கு, அவர் சரியாக எதைத் தாங்கிப் பிடிக்கிறார்? வன்முறைகளைத்தான். படத்தில் வரும் வன்முறையை பற்றி சொல்ல வேண்டுமென்றால் இது ஒரு படமே இல்லை. அடிப்படையில், கையில் இருக்கும் எந்தவொரு பொருளையும் கொண்டு எவ்வளவு படைப்பாற்றலுடன் வன்முறையை வெளிப்படுத்தலாம் என்பதற்கான ஒரு காட்சி வழிகாட்டிப் புத்தகம் இது.

இரண்டு கால்களையும் வெட்டி, உடற்பகுதியை மண்ணெண்ணெயில் ஊறவைத்தாலும், அந்த ஆள் ஒரு டெட் டாக் (TED Talk) பேசுவது போல வசனம் பேசிக்கொண்டிருக்கிறார். மருத்துவ அறிவியல், வாழ்க. ஆஸ்கரை மறந்துவிடுங்கள், நோபல் பரிசு வரப்போகிறது. சுருக்கமாகச் சொன்னால், துரந்தர் 2 ஒரு மிகப்பெரிய ஏமாற்றம்.

அதிகபட்சம் ஒரு தூக்கத்தை வரவழைக்கும் நகைச்சுவைப் படம். பாகம் 1 உங்களை உற்சாகப்படுத்தியிருந்தால், இது உங்களை ‘ஏன் துரந்தர் 2?’ என்று கேள்வி கேட்க வைக்கும். ரன்வீர், நீங்கள் இதைவிடச் சிறந்தவர். இயக்குனர் ஆதித்யா தார், தேசப்பற்றும் பிரசாரமும் பழங்காலத்து விஷயம். அதிலிருந்து வெளியே வாருங்கள்.

Related Stories: