சட்டப்பேரவை தேர்தல் 2021: தே.மு.தி.க-வுக்கு முரசு சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!

சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட தேமுதிகவுக்கு முரசு சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேமுதிகவின் கோரிக்கையை ஏற்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் தேமுதிக போட்டியிட முரசு சின்னம் வழங்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் வருகின்ற 6ம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து கட்சிகளுக்கு சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவித்து வருகின்றது. அந்த வகையில் தற்போது தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்று அழைக்கப்படக்கூடிய தேமுதிக கட்சிக்கு முரசு சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கட்சி தொடங்கப்பட்டது முதல் முரசு சின்னத்தில் போட்டியிட்டு வரும் தேமுதிகவுக்கு இந்த தேர்தலிலும் முரசு சின்னம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சின்னம் ஒதுக்கீடு என்பது தமிழகம், புதுச்சேரி ஆகிய 2 மாநிலங்களுக்கும் பொருந்தும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே பாமகவுக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதேபோல ஏ.எம்.யு. கட்சிக்கும் சின்னங்கள் என்பது ஒதுக்கப்பட்டிருந்தது. நேற்றைய தினம் சில முக்கிய கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தேமுதிகவுக்கு முரசு சின்னம் கிடைக்கப்பெற்றிருக்கிறது. தேமுதிக-வானது அதிமுகவில் இருந்து தங்களது கூட்டணியை முறித்து கொண்டதற்கு பிறகு தனித்து போட்டியிடலாமா? அல்லது வேறு கட்சியுடன் கூட்டணி சேரலாமா? என்று ஆலோசனை நடத்தி வரும் இந்த நேரத்தில் இந்த சின்ன ஒதுக்கீடு மிக முக்கியமானதாக பார்ப்படுகிறது. …

The post சட்டப்பேரவை தேர்தல் 2021: தே.மு.தி.க-வுக்கு முரசு சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: