மக்கள் பிரச்னையை பேசும் படங்களில் நடிப்பேன்: யோகி பாபு

சென்னை: யோகி பாபு நடித்த ‘கெணத்த காணோம்’ என்ற படம் வெற்றிபெற்றுள்ளது. ஆர்.பி டாக்கீஸ் சார்பில் ரமேஷ் பாபு தயாரித்தார். லவ்லின் சந்திரசேகர், ரெய்ச்சல் ரெபேக்கா, ஜார்ஜ் மரியன், ஹலோ கந்தசாமி, ராமகிருஷ்ணன் நடித்தனர். மறைந்த சுரேஷ் சங்கையா எழுதி இயக்கியிருந்தார். இவர் ‘ஒரு கிடாயின் கருணை மனு’, ‘சத்திய சோதனை’ ஆகிய படங்களை எழுதி இயக்கியவர். ‘கெணத்த காணோம்’ படம் சம்பந்தமான நிகழ்ச்சியில் யோகி பாபு பேசியதாவது:

இப்படத்துக்கு ரசிகர்களிடம் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது. நகைச்சுவை வேடங்களை தாண்டி, பரிசோதனை முயற்சியாக சில மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க, அனைவரும் என்னை ஊக்கப்படுத்தி வருகின்றனர். அந்த ஊக்கத்தால்தான், வித்தியாசமான மற்றும் அர்த்தமுள்ள கதாபாத்திரங்களில் என்னால் நடிக்க முடிகிறது. சாமானிய மக்களின் வாழ்க்கை மற்றும் போராட்டங்களை திரையில் பிரதிபலிக்கும் வகையிலான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க தாயாராக இருக்கிறேன். அப்படிப்பட்ட கதை வைத்திருப்பவர்கள் தாராளமாக என்னை அணுகலாம்.

Related Stories: