ஐதராபாத்: பாலியல் தொல்லையால் சினிமாவிலிருந்து சின்னத்திரைக்கு போய்விட்டேன் என நடிகை ஸ்ரீ சத்யா கூறினார். தெலுங்கில் சில படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ஸ்ரீ சத்யா. திடீரென சினிமாவுக்கு முழுக்கு போட்டது குறித்து இப்போது மனம் திறந்து பேசியிருக்கிறார். அவர் கூறியது: சினிமாவில் நுழைந்தது முதல், தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் எனக்கு டார்ச்சர் தர ஆரம்பித்தனர்.
அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால் மட்டுமே வாய்ப்பு என்றார்கள். இதனால் டஜன் படங்களை இழந்திருப்பேன். சினிமாதுறையில் சிலர் பாலியல் தொல்லையும் தந்தனர். இதனால் இந்த துறை வேண்டாம் என சின்னத்திரைக்கு சென்றேன். தெலுங்கில் பல தொடர்களில் நடித்துவிட்டேன். இப்போது நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் உணர்கிறேன் என்றார்.
