திகிலூட்டும் பின்னணி இசை அமைத்த அமர்கீத்

 

சென்னை: தமிழில் வெளியான ‘மையல்’ என்ற படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானவர், அமர்கீத். அவர் கூறுகையில், ‘முதல் வகுப்பு படிக்கும்போது கீ-போர்டு வாசித்தேன். பிறகு நானாகவே மென்பொருட்களின் மூலமாக இசை அமைக்க பயிற்சி பெற்றேன். இதையடுத்து ஒலி சம்பந்தமான படிப்பை முடித்து விட்டு குறும்படங்கள், வெப்தொடர்கள், ஆவணப்படங்களுக்கு இசை அமைத்தேன்.

சமீபத்தில் வெளியான ‘99/66’ என்ற படத்துக்கு திகிலூட்டும் முறையில் பின்னணி இசை அமைத்தேன். அதற்கு ரசிகர்கள், விமர்சகர்கள், திரைத்துறையினரிடம் பாராட்டு பெற்றேன். இது எனக்கு அதிக உற்சாகத்தை அளித்துள்ளது. தொடர்ச்சியாக நான் தமிழ்ப் படங்களுக்கு இசை அமைப்ப தற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது’ என்றார்.

 

Related Stories: