முனீஸ்காந்த் நடிக்கும் தி டார்ம்

சென்னை: முனீஸ்காந்த் கதையை வழிநடத்திச் செல்லும் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘தி டார்ம் ‘ திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. தீபா ஸ்ரீதர் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் முனீஸ்காந்த், ஷாலினி, காசி தங்கம், சபரீஷ், சாம் ஜான், அருண் கார்த்திக், நிகில் நாயர், வசுந்தரா ஸ்ரீநாத், சிந்து, பெரோஜ் மற்றும் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இளையராஜா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சாம் விஷால் இசையமைக்கிறார். குட் ஸ்டஃப் நிறுவனம் சார்பில் பி. டில்லி தயாரிக்கிறார். அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனத்தை கவரும் வகையில் புதுமையான கதை அம்சத்துடன் ‘தி டார்ம்’ உருவாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Related Stories: