உடல் எடையை குறைத்த தமன்னா

 

சென்னை: சுந்தர்.சி இயக்கும் ‘புருஷன்’ படத்தில் விஷால் ஜோடியாக நடிக்கும் தமன்னா (36), சுமார் 10 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எனது 30 வயது வரை மெலிந்த உடலமைப்பு காணப்பட்டது. இப்போது எடையை குறைத்த பின்பு, பழைய நிலையை அடைந்ததாக உணர்கிறேன். ஒரு பெண்ணின் உடலமைப்பு 5 வருடங்களுக்கு ஒருமுறை மாறிக்கொண்டே இருக்கும். நானும் அப்படித்தான். எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி, பிறகு அதிலிருந்து மீண்ட பின்பு, சில விஷயங்களை என்னால் சரியாக பின்பற்ற முடியவில்லை.

அன்றாடம் உடற்பயிற்சிகளை செய்ேதன். டயட், தூக்கம் போன்ற ஆரோக்கியமாக இருப்பதற்கு தேவையான விஷயங்களில் ஈடுபட்டேன். தசைகளை வலுப் படுத்துவதில் அதிக கவனம் செலுத்தினேன். பெண்கள் 30 வயதை தாண்டும்போது, வலிமைக்கான பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். வயது அதிகரிக்கும் நிலையில், தசையின் வலிமை எவ்வளவு இருக்கிறது என்பதே உங்கள் ஆரோக்கியத்தை முடிவு செய்யும்’ என்றார்.

 

Related Stories: