கர்நாடகா, ஒன்றிய அரசை கண்டித்து மயிலாடுதுறையில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை: மேகதாதுவில் சட்டவிரோதமாக காவிரி ஆற்றின் குறுகே அணைகட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசையும் அதற்கு துணை போகும் ஒன்றிய அரசை கண்டித்தும் விவசாய சங்கத்தினர் மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பதும், அதற்கு ஒன்றிய அரசு துணை போவதும் வாடிக்கையாக இருந்துவருகிறது, ஒன்றியத்திலும், கர்நாடக மாநிலத்திலும் பாஜக அரசுகளே ஆட்சியில் உள்ளதால் மேகதாது அணை கட்ட முழுமுயற்சி நடைபெற்று வருகிறது. மாநில அமைச்சர்கள் தொடர்ந்து இதனை வலியுறுத்தியும், அணையை கட்டியே தீருவோம் என்றும் பேசி வருவதால் தமிழக டெல்டா பகுதி விவசாயிகள் கொதித்தெழுந்துள்ளனர். தமிழகம் முழுவதும் ஆங்காங்கே தொடர் போராட்டங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளது.கடந்த வாரம் மயிலாடுதுறையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டது, அதன்படி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் துரை தலைமையில் மயிலாடுதுறை மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் அலுவலகத்திலிருந்து விவசாய சங்கத்தினர் புறப்பட்டு ஊர்வலமாக கச்சேரி சாலை வழியாகச் சென்று காந்திஜி சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தை அடைந்தனர். அங்கு அகில இந்திய விவசாய தொழிற்சங்க மாநில துணைதலைவர் ஸ்டாலின், மாவட்ட தலைவர் சிம்சன், மாவட்ட பொருளாளர் வைரவன், ஒன்றிய செயலாளர் ராயர், மாவட்ட துணைத்தலைவர் மணி, சந்திரமோகன், பாஸ்கரன், பரமசிவம், சரவணன், பிரபாகரன், நெடுஞ்செழியன், ஞானப்பிரகாசம், தியாகராசன் மற்றும் கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் சுந்தரலிங்கம் ஆகிய கட்சி பொறுப்பாளர்கள், பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசையும் கர்நாடக அரசையும் வன்மையாகக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்….

The post கர்நாடகா, ஒன்றிய அரசை கண்டித்து மயிலாடுதுறையில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: