அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன்

ஷாருக்கான், நயன்தாரா நடிக்கும் லயன் படத்தை அட்லி இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை அவர் இயக்க உள்ளாராம். புஷ்பா படம் அனைத்து மொழிகளிலும் ஹிட் ஆனதால், அல்லு அர்ஜுனை வைத்து அட்லி இயக்கும் படமும் பல மொழிகளில் உருவாக்க திட்டமிட்டுள்ளார்களாம். புஷ்பா படத்தில் லோக்கல் ரவுடியாக அல்லு அர்ஜுன் நடித்திருந்தார். அட்லி படத்தில் ஹைடெக் கேங்ஸ்டராக அவர் நடிக்கப் போகிறாராம்.

முழுக்க வெளிநாடுகளிலேயே இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டில்தான் துவங்கும் என கூறுகிறார்கள். அதற்கு முன்பாக புஷ்பா 2 படத்தை முடித்துவிட்டு மற்றொரு குறுகிய கால படம் ஒன்றிலும் நடித்து முடிக்க அல்லு அர்ஜுன் திட்டமிட்டுள்ளாராம்.

Related Stories: