ஜீவா நடித்த ‘ரௌத்திரம்’, விஜய் சேதுபதி நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, கார்த்தி நடித்த ‘காஷ்மோரா’, விஜய் சேதுபதி நடித்த ‘ஜூங்கா’, கீர்த்தி பாண்டியன் நடித்த ‘அன்பிற்கினியாள்’ ஆகிய படங்களை இயக்கிய கோகுல், அடுத்து ‘கொரோனா குமார்’ என்ற படத்தை இயக்குகிறார். இதில் சந்தானம் ஹீரோவாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை, தற்போது சிம்பு நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.