ஆஸ்கர் விருது பட்டியலில் இருந்து சூரரை போற்று திரைப்படம் வெளியேறியது

ஆஸ்கர் விருது பட்டியலில் இருந்து சூரரை போற்று திரைப்படம் வெளியேறியுள்ளது. திரையுலகின் உயரிய விருதான ஆஸ்கர் விருதுக்கு சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த இசையமைப்பாளர் உள்ளிட்ட பிரிவுகளில் இந்தியாவிலிருந்து சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து ஆஸ்கர் குழு வெளியிட்ட 366 படங்கள் கொண்ட பட்டியலில் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை ஆகிய 3 பிரிவுகளில் சூரரை போற்று படம் இடம்பிடித்து இருந்தது. இந்நிலையில் நேற்று வெளியான இறுதி பட்டியலில் சூரரை போற்று திரைப்படம் எந்த பிரிவிலும் தேர்வாகாமல் வெளியேறியது. இதனால் சூர்யா ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Related Stories:

>