திரை விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்ட பிளாக்பஸ்டர் படங்களான ‘முண்டாசுப்பட்டி’, ’ராட்சசன்’ ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றிய இயக்குனர் ராம்குமார், ஹீரோ விஷ்ணு விஷால் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம், ‘இரண்டு வானம்’. டி.ஜி.தியாகராஜன் வழங்கும் சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் செந்தில் தியாகராஜன், அர்ஜூன் தியாகராஜன் தயாரித்துள்ளனர். விஷ்ணு விஷால் ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார்.
கதைக்களம், உருவாக்கம், வலுவான கூட்டணி போன்ற காரணங்களால், இப்படம் வெளியாவதற்கு முன்பே பரபரப்பாக பேசப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இரண்டு வானங்கள், ஒரே பார்வை மற்றும் ஆர்வத்துடன் இயங்கும் உலகம் என்று உருவாகியுள்ள இப்படம், இந்த கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறது. திபு நைனன் தாமஸ் இசை அமைக்க, தினேஷ் கே.பாபு ஒளிப்பதிவு செய்துள்ளார். கோபி ஆனந்த் அரங்கம் அமைக்க, சான் லோகேஷ் எடிட்டிங் செய்துள்ளார். விக்கி சண்டைப் பயிற்சி அளிக்க, ஹரிஹர சுதன் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் பொறுப்பு ஏற்றுள்ளார்.
