சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அல்லு அர்ஜுன், அட்லி இணையும் படம் இன்று தலைப்பு வெளியீடு

சென்னை: சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் பான் வேர்ல்ட் படத்தின் தலைப்பு இன்று வெளியாகிறது. அல்லு அர்ஜுன் நடிப்பில் அட்லி இயக்கும் இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘ஏஏ 22 ஏ6’ (அல்லு அர்ஜுனின் 22வது படம், அட்லியின் 6வது படம்) என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரிக்கிறார். சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

இது பான் வேர்ல்ட் படமாக வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் ஹீரோயினாக தீபிகா படுகோன் நடிக்கிறார். மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இந்நிலையில் அல்லு அர்ஜுன் தனது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி படத்தின் தலைப்புடன் கூடிய பர்ஸ்ட் லுக் இன்று பகல் 11 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு வெளியானதும் சினிமா ரசிகர்களும் அல்லு அர்ஜுன் ரசிகர்களும் ஆவலுடன் படம் குறித்த இந்த அப்டேட்டுக்காக காத்திருக்கின்றனர். இதையொட்டி நேற்று வெளியிடப்பட்ட போஸ்டரில் ஒரு மிருகத்தின் கை மட்டும் இருக்கும் வகையில் புகைப்படம் வெளியிடப்பட்டது. இதுவும் படத்துக்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

Related Stories: