சென்னை: ‘அடவி’, ‘மனிதர்கள்’ ஆகிய படங்களை தொடர்ந்து ஸ்ரீகிரிஷ் பிக்சர்ஸ் சார்பில் மு.கி.சாம்பசிவம் தயாரிக்க, சந்தோஷ் இராவணன் எழுதி இயக்கியுள்ள படம், ‘அந்தரன்’. பிரஜின், இவானா வருண், அதிரன், அனுபமா குமார், பத்மன், மு.கி.சாம்பசிவம் ரமேஷ் பாபு நடித்துள்ளனர். ஹரி எஸ்.ஆர் இசை அமைக்க, கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் குறித்து சந்தோஷ் இராவணன் கூறுகையில், ‘முன்னதாக ‘நெடிய கழியும் இரா’ என்ற குறும்படத்தை இயக்கி விருதுகளும், பாராட்டுகளும் பெற்றேன்.
அந்தரன் என்றால், மறைந்திருந்து வேட்டையாடுதல் என்று அர்த்தம். ஒரு இளம் பெண்ணை சுற்றி சில அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கின்றன. அதற்கு என்ன காரணம், அதற்கு பின்னால் மறைந்திருப்பவர் யார் என்று போலீஸ் அதிகாரி கண்டுபிடிக்கிறார். போலீஸ் வேடத்துக்கு பிரஜின் பொருத்தமாக இருந்தார். கிளைமாக்ஸ் காட்சியில் இவானா வருண் சிறப்பாக நடித்து அசத்தினார். இவர் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்’ என்றார்.
